தூத்துக்குடியில் போலீசாருக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு


தூத்துக்குடியில் போலீசாருக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போலீசாருக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த போலீசாருக்கு நேற்று பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் போலீசார் முதல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வரை பங்கேற்று பணிமாறுதல் பெற்றனர்.

பொதுமாறுதல் கலந்தாய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் போலீசாருக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசாருக்கு பணியாற்றிய வந்த போலீஸ் நிலையங்களில், அவர்கள் செய்த பணியின் அடிப்படையிலும், எந்தெந்த போலீஸ் நிலையங்களில் பணியாற்றியுள்ளனர் என்பதன் அடிப்படையிலும,் அவர்களிடம் நேரடியாக கேட்டு, மற்ற போலீஸ் நிலையங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஏற்ப அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு பொதுமாறுதல் வழங்கப்பட்டது.

271 பேர்

தூத்துக்குடி நகரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகள் பணி முடித்த 2-ம் நிலை போலீசார் முதல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை விருப்பத்தின்பேரில் பணி மாறுதல் கேட்டிருந்தவர்கள் 271 பேருக்கு பொதுமாறுதல் பட்டியல் தயார் செய்யப்பட்டு நேற்று முதல் கட்டமாக கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

இந்த கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேஷியஸ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தூத்துக்குடி நகரம் (பொறுப்பு) பொன்னரசு, (திருச்செந்தூர்) ஆவுடையப்பன், ஸ்ரீவைகுண்டம் (மாயவன்) சாத்தான்குளம் (அருள்), மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர் முன்பு நடந்தது.

இக்குழுவின் மூலம் போலீசாரின் விருப்பங்களை நேரடியாக கேட்டறிந்து காவல் நிலையங்களில் ஏற்கனவே காலிப்பணி இடங்கள் மற்றும் தற்போது மாறுதலாகி செல்லும் காலிப்பணி இடங்களையும் கணக்கிட்டு அவர்களின் விருப்பத்திற்கேற்ப மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பணி மாறுதல் உத்தரவுகளை வழங்கினார்.


Next Story