மீண்டும் போராட்டம் நடத்த முடிவு
தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயம் செய்யக்கோரி மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கோத்தகிரி,
கோத்தகிரியில் மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ஐ.போஜன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தேவா கவுடர், நஞ்சா கவுடர், சில்லபாபு, மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.30 நிர்ணயிக்க வேண்டும். இதை வலியுறுத்தி மத்திய மந்திரி, வனத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு மனுக்கள் அளிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நீலகிரி மாவட்டம் முழுவதிலும் உள்ள வியாபாரிகள் சங்கங்கள், லாரி, டேக்சி, ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவைப் பெற்று மாவட்ட அளவில் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் அருணா நந்தகுமார் நன்றி கூறினார்.