வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பூர்
வீரபாண்டி
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த சீர்காழிபேட்டையைச் சேர்ந்த ராமர் மகன் விஜயகுமார் (வயது 23). இவர் திருப்பூர் குப்பாண்டபாளையம் பகுதியில் நண்பர்களுடன் தங்கி அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விஜயகுமார் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அந்த பெண் தற்போது விஜயகுமாரிடம் சரிவர பேசுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு மது அருந்தியுள்ளார். பின்பு அனைவரும் தூங்கிய பிறகு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story