பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும்


பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு பகுதியில் பழுதடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு பகுதியில் பழுதடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்காணிப்பு பகுதி

மணல்மேடு பேரூராட்சி பகுதி பல ஆண்டுகளாக அரசின் சிறப்பு கண்காணிப்பு பகுதியாக உள்ளது. மயிலாடுதுறை, கடலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களையும் இணைக்கும் இணைப்பு பகுதியாகவும் மணல்மேடு உள்ளது. இப்பகுதியில் கொள்ளிடம் ஆறு ஓடுவதால் இங்கு மணல்கடத்தல், சாராய விற்பனை உள்ளிட்ட வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை பிடிப்பதற்கும், மேலும் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் போலீசார் சார்பில் பேரூராட்சியின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சீரமைக்க வேண்டும்

இந்த நிலையில் மணல்மேடு கடைவீதி கிழாய், பாப்பாக்குடி, மெயின்ரோடு சந்திப்பில், போலீசாரால் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பல மாதங்களாக செயல் படாமல் உள்ளன.

இதுகுறித்து சமூக ஆர்வலர் மணல்மேடு சேதுராமன் கூறுகையில், முக்கியமான கண்காணிப்புப் பகுதியான கடைவீதி உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் பொது நலன் கருதியும், பாதுகாப்பு கருதியும், செயல்படாமல் உள்ள கேமராக்களை பழுது நீக்கி உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் ஒரு சில முக்கிய இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.


Next Story