குறைபாடு உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் குடோனில் வைக்கப்பட்டது
திருப்பத்தூரில் குறைபாடு உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் குடோனில் வைக்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து குறைபாடுகள் உடைய 44 கன்ட்ரோல் யூனிட் கருவிகள், 8 பேலட் யூனிட் கருவிகள், 101 வாக்குப்பதிவு சரிபார்க்கும் கருவிகள் என மொத்தம் 153 மின்னணு வாக்கு எந்திரங்கள் திருப்பத்தூரில் உள்ள மாவட்ட வேளாண்மை விற்பனை கூட்டுறவு கூடத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
அப்போது மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், தேர்தல் தாசில்தார் மோகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story