கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் குறைபாடுகளை சரி செய்ய கோரிக்கை


கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் குறைபாடுகளை   சரி செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பா.ம.க.வினர் கலெக்டர் செந்தில்ராஜிடம் திங்கட்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பா.ம.க.வினர் கலெக்டர் செந்தில்ராஜிடம் திங்கட்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

அரசு ஆஸ்பத்திரி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், தெற்கு மாவட்ட செயலாளர் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் செந்தில்ராஜிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான விவசாயிகள், அடித்தட்டு மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் வார்டு கழிப்பறைகளில் கதவு இல்லாமல் உள்ளது.

இதனால் உள்நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு கதவுகள் அமைக்க வேண்டும். நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்குவதற்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும், பிரசவ வார்டுக்கு பின்புறம் செப்டிக் டேங்க் நிரம்பி வழிகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

டாஸ்மாக்

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தமிழக அரசு டாஸ்மாக் கடையில் மதுவாங்க வருபவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்து 25 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுவிற்பனையை தடை செய்ய வேண்டும், வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், பஸ்நிலையம் அருகில் டாஸ்மாக் கடைகள் இருந்தால் அகற்ற வேண்டும், மதுபானம் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.


Next Story