வேதம் படித்த மாணவர்களுக்கு பட்டம்-மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கினார்
ேவதம் படித்த மாணவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பட்டம் வழங்கி பேசினார்.
திருப்பரங்குன்றம்,
வேதம் படித்த மாணவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பட்டம் வழங்கி பேசினார்.
பட்டமளிப்பு விழா
திருப்பரங்குன்றம் ஸ்ரீஸ்கந்தகுரு வித்யாலயத்தின் 30-வது ஆண்டு விழா மற்றும் 24-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.. விழாவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முதல் ஸ்தானிகரும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான சுவாமிநாதன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார், மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்., திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் சுரேஷ்., கோவை தொழில் அதிபர் உமா மகேஸ்வரி, தொழிலதிபர் யுவராஜ் மற்றும் திருப்பரங்குன்றம் கோவில் பட்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஸ்ரீஸ்கந்தகுரு வித்யாலயம் பாடசாலையில் 148 மாணவர்கள் பயின்று வந்தனர். அதில் 36 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. அதை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கி பாராட்டி பேசினார்.
வேதம் எந்திரமயமாகாது
அப்போது அவர் பேசியதாவது,
வேதம், சிவாகமம் படிப்பதற்கு தங்களது குழந்தைகளை அனுப்பிய பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள். வேதம் படிப்பவர்கள் இன்றைக்கு அடையாளமாக திகழ்கின்றனர். உலகம் முழுவதும் எந்திரமயமாகுதல் அதிகரித்துவிட்டது. வேதம் படிக்கும் துறையில் மட்டுமே எந்திரமயமாகாது என்றார்.
விழாவையொட்டி ஸ்கந்தகுரு வித்யாலயா மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் ஸ்ரீஸ்கந்த குருவித்யாலயம் முதல்வர் க.ராஜா பட்டர் நன்றி கூறினார்.