1,217 மாணவர்களுக்கு பட்டம்
ஏ.வி.சி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா: 1,217 மாணவர்களுக்கு பட்டம் சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி வழங்கினார்
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் நாகராஜன்தலைமை தாங்கினார். தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் ரவிசெல்வம், துணை முதல்வர் மதிவாணன், டீன் மயில்வாகணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியும், ஏ.வி.சி. கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான வெங்கட்ராமன் கலந்து கொண்டு 1,217 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:- மாணவர்களாகிய நீங்கள் பட்டம் பெற காரணம் உங்களது பெற்றோர்கள். அவர்கள் தன் வயிறை சுருக்கி தியாகங்கள் பல செய்து உங்களை இந்த அளவிற்கு உயர்த்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்ய வேண்டும். எவ்வளவு வேலை பளு இருந்தாலும், ஒரு நாளைக்கு 5 நிமிடங்களையாவது ஒதுக்கி பெற்றோர்களை நினைத்து சிந்தித்து பார்க்க வேண்டும். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் சாதிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இதில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.