917 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 917 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வேந்தர் பத்மநாபன் வழங்கினார்.
கொரடாச்சேரி:
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 917 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வேந்தர் பத்மநாபன் வழங்கினார்.
பட்டமளிப்பு விழா
திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த மத்திய பல்கலைக்கழகத்தில் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
மத்திய பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. விழாவில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வேந்தர் ஜி.பத்மநாபன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் கலந்து கொண்ட அனைவரும் பாரம்பரிய முறைப்படி தோளில் துண்டு போட்டு இருந்தனர்.
39 மாணவ, மாணவிகள் பதக்கங்களை பெற்றனர்
டெல்லி சர்வதேச மைய மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப இயக்குனர் பேராசிரியர் ரமேஷ் வி.சோண்டி பேசினார். விழாவில் 523 மாணவிகள், 394 மாணவர்கள் என மொத்தம் 917 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் 39 மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக அளவில் இடங்களை பிடித்து பதக்கங்களை பெற்றனர்.
விழாவில் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், பதிவாளர் சுலோச்சனா சேகர் உள்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.