தொழிலாளி உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம்:கம்பம் அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் மறியல்


தொழிலாளி உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம்:கம்பம் அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஆனது. இதனால் அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தேனி

பிரேத பரிசோதனை

கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜக்கையன் (வயது 47). திராட்சை தோட்டங்களில் மருந்து தெளிக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், ஒரு தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக பரிசோதனை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் ஜக்கையன் உடலை கொடுக்குமாறு அவரது உறவினர்கள் டாக்டர்களிடம் கேட்டனர். ஆனால் டாக்டர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்து தான் தருவதாக கூறினர். இதையடுத்து நேற்று மதியம் வரை ஜக்கையின் உடல் பிரேத பரிேசாதனை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல்

இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்ய தாமதமானதாக கூறி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு கம்பம்-கூடலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா சம்பவ இடத்தி்ற்கு வந்தார். பின்னர் அவர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கால தாமதமின்றி உடலை பிரேத பரிசோதனை செய்து தருவதாக கூறினார்.

இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் ½ மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story