சாலை அமைக்கும் பணி தாமதம்


சாலை அமைக்கும் பணி தாமதம்
x

சாலை அமைக்கும் பணி தாமதம்ாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 39-வது வார்டு பகுதியில் பேராண்டம்மாள் தெரு உள்ளது. இந்த தெருவில் 50-க்கும் குறைவான வீடுகள் உள்ளது. பல்வேறு பகுதிகளை ஒன்றிணைக்கும் தெருவாக பேராண்டாம்மாள் தெரு உள்ளது. இந்த தெருவை கடந்து தான் பஜார் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. மிகவும் குறுகலான இந்த பகுதியை காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பான முறையில் கடந்து செல்வார்கள். எனவே எப்போதும் இந்த தெரு பரபரப்பாகவே இருக்கும். இந்த நிலையில் இங்குள்ள சாலை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறியது. இதனை தொடர்ந்து அந்த பகுதி கவுன்சிலர் ராஜேஷ் இதுகுறித்து மேயர் சங்கீதா இன்பத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று வாருகால் வசதியுடன் புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியை பார்வையிட்டு மிகவும் முக்கிய சாலை என்பதால் உடனே சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 1 மாதங்களுக்கு முன்னர் வாருகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணி முடியாமல் இருக்கிறது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தற்போது மிகவும் சிரமப்பட்டு வேறு வழியாக சென்று வருகிறார்கள். அதேபோல் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த பகுதியில் நடைபெற்று வரும் வாருகால் மற்றும் சாலை அமைக்கும் பணியினை விரைவில் முடித்து தர வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Related Tags :
Next Story