வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு


வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு
x

அரியலூரில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

அரியலூர்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் வாக்காளர்கள் யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படாததால், யாரும் வரவில்லை. பின்னர் வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு செய்த வாக்கு பெட்டிகள் வாக்குச்சாவடி அலுவலர்கள் வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. பின்னர் வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு, அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டன. அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த அறைகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


Next Story