குண்டும் குழியுமான சாலை


குண்டும் குழியுமான சாலை
x
திருப்பூர்

கொளத்துப்பாளையத்தில் இருந்து பிரிந்து சங்கராண்டாம்பாளையம் செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.

குண்டும் குழியுமான சாலை

தாராபுரம் கரூர் சாலையில் கொளத்துப்பாளையத்தில் இருந்து பிரிந்து சங்கராண்டாம்பாளையம் செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த தார்சாலை வழியில் ஆத்துக்கால் புதூர், கிருஷ்ணாபுதூர், கருக்கம்பாளையம், ரத்தக்காட்டூர், நல்லகுமரன்கவுண்டர்புதூர், எருசனாம்பாளையம், வேலப்பபாளையம், புதுப்பாளையம், கருக்கல்பாளையம், சங்கராண்டாம் பாளையம் ஆகிய ஊர்கள் உள்ளன. இந்த சாலை 15 ஆண்டுகளுக்கு முன்னால் போடப்பட்டதாகும். மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலையில் குளத்துப்பாளையம் வந்து தாராபுரம், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.

. இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வரும்போது சில சமயம் டயர் பஞ்சராகி நடுவழியில் வாகனத்தை தள்ளி சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது.

சீரமைக்க வேண்டும்

இந்த சாலையை சீரமைக்க கோரி பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் தார் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மறியல் நடத்தப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Next Story