அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க கோரிக்கை -முன்னாள் துணை ராணுவப்படை வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்


அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க கோரிக்கை -முன்னாள் துணை ராணுவப்படை வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்
x

அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என முன்னாள் துணை ராணுவப்படை வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

மதுரை


தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல்படை நல மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் பொதுக்கூட்டம் மதுரையில் நடந்தது. தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் செல்லச்சாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் பூர்ணசந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான துணை ராணுவப்படை வீரர்களின் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றி தர வேண்டும். ஓய்வு பெற்ற இந்திய ராணுவ முப்படை வீரர்களுக்கு மத்திய அரசு 2012-ல் பல்வேறு சலுகைகளை அறிவித்தது. 60 ஆண்டு காலமாக தமிழ்நாட்டு துணை ராணுவப்படை வீரர்களின் நலன் சார்ந்த எந்த கோரிக்கைகளையும் மாநில அரசு நிறைவேற்றி தராமல் உள்ளது. எனவே, மத்திய அரசு அறிவித்த சலுகைகளை மாநில அரசு நிறைவேற்றி தர வேண்டும். டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். தமிழக துணை ராணுவபடை வீரர்கள் நலவாரியம் மற்றும் தனி அமைச்சர் நியமிக்க வேண்டும். துணை ராணுவ வீரர்களின் குறைகளை தீர்க்க மாவட்ட கலெக்டர் தலைமையில் மாதம்தோறும் கூட்டம் நடத்த வேண்டும். துணை ராணுவ படை வீரர்களின் குழந்தைகளுக்கு மத்திய மாநில பள்ளி, கல்லூரிகளில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், முன்னாள் மத்திய ஆயுத காவல்படை வீரர்கள், காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story