நீலகிரி மாவட்டத்தில் பச்சை ேதயிலைக்கு கூடுதல் விலை வழங்க கோரிக்கை


நீலகிரி மாவட்டத்தில் பச்சை ேதயிலைக்கு கூடுதல் விலை வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் பச்சை ேதயிலைக்கு கூடுதல் விலை வழங்க கோரிக்கை

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அம்பேத்கர் மக்கள் இயக்க நகர செயலாளர் இந்திரஜித் மற்றும் தேயிலை தொழிலாளர்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- நீலகிரி மாவட்டத்தில் சிறு குறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தை முழுவதுமாக நம்பி உள்ளனர்.

இந்தநிலையில் பசுந்தேயிலைக்கான உரியவிலை கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகும் சூழலில் சிக்கித் தவித்து வருகின்றனர். வேறு வாழ்வாதாரம் இல்லாதசூழலில் தேயிலையை மட்டுமே நம்பி இருக்கும் சிறு விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அரசு நிர்ணயிக்கும் விலையை விடமிகப் குறைந்தவிலையே வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள், தோட்டத்தில் வேலை செய்வதற்கு கூலி கொடுக்கவும், தேயிலை தோட்டத்தை பராமரிக்க உரமிட பணமின்றி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் வனவிலங்குகளில் தொல்லை வைத்து மழை வெயில் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றாலும் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டு வருகின்றது. அதனால் தேயிலை விவசாயத்தை நம்பி இருக்கும் சிறு குறு விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூடுதல் விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story