கட்டுமான தொழிலாளர்களுக்கு பென்சன் தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை
கட்டுமான தொழிலாளர்களுக்கு பென்சன் தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்
கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி.யின் 5-வது மாநாடு நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். இதில் 27 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பென்சன் தொகையை மாதம் ரூ.6000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு மாதாந்திர பென்சன் தொகையை காலதாமதமின்றி மாதம் மாதம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் நலவாரியத்தை முடக்க மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர் பதிவுகளை தமிழகத்தில் பதியாமல் மாநில நலவாரியத்தை மேலும் சிறப்பாக நடத்திட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட செயலாளர் வடிவேலன், பொருளாளர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story