ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் நிலத்தை மீட்க கோரிக்கை


ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் நிலத்தை மீட்க கோரிக்கை
x

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் நிலத்தை மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் உள்ள திரிபுரசுந்தரி சமேத பிரம்மேஸ்வரர் கோவில், கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில் மற்றும் எல்லையம்மன் கோவில்களின் ரூ.200 கோடி மதிப்பிலான 20 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்பது குறித்து திருப்பத்தூர் திருக்கோவில் மீட்பு இயக்கம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

தலைவர் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் சக்தி, பிரகாஷ், ரமேஷ், பாரதிதாசன், ஆனந்தன், முத்துகுமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் கோவில் நிலம் மீட்புக்கு குழு அமைக்கப்பட்டு போராடுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story