ஆற்றுக்குள் கொட்டப்பட்ட கட்டிட இடிபாடுகளை அகற்ற கோரிக்கை


ஆற்றுக்குள் கொட்டப்பட்ட கட்டிட இடிபாடுகளை அகற்ற கோரிக்கை
x

ஆற்றுக்குள் கொட்டப்பட்ட கட்டிட இடிபாடுகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள கோட்டைப்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த அரசு கட்டிடங்களை அப்புறப்படுத்தியதில் கட்டிட இடிபாடுகளை அகற்றி வைப்பாற்றின் மையப்பகுதியில் அணைக்கட்டு அருகே கொட்டப்பட்டுள்ளது. இதனால் வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக இருப்பதுடன் ஆற்றிற்குள் நடந்து செல்லும் பொது மக்களுக்கு காயத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆகையால் உடனடியாக ஆற்றுக்குள் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story