போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் திருவாரூர் நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தல்
திருவாரூர் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகரசபை கூட்டம்
திருவாரூர் நகரசபை சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில் தலைமை தாங்கினார். நகரசபை துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், நகராட்சி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகரசபை உறுப்பினர்கள் பிரகாஷ், செந்தில், சங்கர், அசோகன், கலியபெருமாள், சின்னவீரன், அன்வர் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
திருவாரூர் நகர் முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வார தேவையான எந்திரங்களை நகராட்சிக்கு சொந்தமாக வாங்குவது. நகர் முழுவதும் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும்.
சீரமைக்க வேண்டும்
திருவாரூர் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். கம்பர் தெருவில் சமுதாய கூடத்தை சீரமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
திருவாரூரில் உள்ள தனியார் உதவி பெறும் பள்ளியை அரசு பள்ளியாக மாற்றிட அரசை கேட்டு கொள்வது. திருவாரூர் நகரில் நீண்ட காலத்திற்கு வடிகால்களை தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக அரசிற்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதில் நகராட்சி மேலாளர் முத்துகுமரன், சுகாதார ஆய்வாளர் தங்கராம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.