பள்ளத்தை மூட கோரிக்கை


பள்ளத்தை மூட கோரிக்கை
x

தாயில்பட்டி அருகே பள்ளத்தை மூட கோாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

தாயில்பட்டி,

கணஞ்சாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த வனமூர்த்தி லிங்கபுரம் கிராமம் சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வெம்பக்கோட்டை அணையிலிருந்து சிவகாசிக்கு கொண்டு செல்லப்படும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உடைந்த குழாயை சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் சரி செய்யப்படாதால் குடிநீர் வீணாக செல்கிறது. மேலும் பஸ் நிறுத்தம் அருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்படாததால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். ஆகையால் உடனடியாக உடைந்த குழாயை சரி செய்து தோண்டப்பட்ட குழியை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story