கல் குவாரியை நிரந்தரமாக மூட கோரிக்கை


கல் குவாரியை நிரந்தரமாக மூட கோரிக்கை
x

கல் குவாரியை நிரந்தரமாக மூடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தென்காசி

ஆலங்குளம்:

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பூலாங்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் திரவியக்கனி தலைமை தாங்கினார். துணை தலைவர் அருள் ஆனந்த் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்திற்கு அயோத்தியாபுரிபட்டினம், பூலாங்குளம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரவு செலவு கணக்குகளை ஊராட்சி செயலர் காந்திலால் பொதுமக்கள் முன்னிலையில் வாசித்தார். புதிய சாலை அமைத்தல், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் கேட்டறிந்தனர்.

மேலும் ராமநாதபுரம் கிராமம் அருகே பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி தீர்மானம் இயற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஊர் நாட்டான்மை முருகன்் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story