ரசாயன முறையில் வளர்க்கப்படும் மீன்களை விற்க தடை விதிக்க வேண்டும்


ரசாயன முறையில் வளர்க்கப்படும் மீன்களை விற்க தடை விதிக்க வேண்டும்
x

ரசாயன முறையில் வளர்க்கப்படும் மீன்களை விற்க தடை விதிக்க வேண்டும் என நாட்டு மீன் வளர்ப்பு சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட நாட்டு மீன் வளர்ப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் காதர் உசேன் தலைமையில் மாவட்ட செயலாளர் பாலு, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கிராம ஊராட்சிக்கு சொந்தமான குளங்கள் மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக உறுதிதிட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பண்ணை குட்டைகள், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அமைக்கபட்ட பண்ணை குட்டைகளில் கெழுத்தி, வெள்ளிகெண்டை, புல்கெண்டை, ரோகு, கட்லா, விரால், உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் பல பகுதிகளில் ரசாயன முறையில் வளர்க்கப்படும் மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வகை மீன்களை உண்பதன் மூலம் பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றது. எனவே மாவட்ட நீர்வாகம் வெளி மாநில, மாவட்ட ரசாயன மீன்கள் விற்பனை செய்வதை தடை செய்து பொதுமக்களுக்கு தரமான மீன்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


Next Story