மானிய விலையில் மின்சாரம்,டீசல் வழங்க வேண்டும்- இறால் வளர்ப்பு விவசாயிகள்


மானிய விலையில் மின்சாரம்,டீசல் வழங்க வேண்டும்- இறால் வளர்ப்பு விவசாயிகள்
x

மானிய விலையில் மின்சாரம்,டீசல் வழங்க வேண்டும் என இறால் வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:-

நாகை மாவட்டம் கீழையூர் அருகே உள்ள திருப்பூண்டியில் நாகை மாவட்ட இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். செயலாளர் சிவசங்கரன், பொருளாளர் ரவிக்குமார் உறுப்பினர் மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-இறால் உற்பத்தியாளர்களுக்கு விலை வீழ்ச்சி அடைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே இறால்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மானிய விலையில் மின்சாரம், டீசல் வழங்க வேண்டும். அறுவடை காலங்களில் அண்டை மாநிலங்களில் இருந்து இறால்களை கொள்முதல் செய்து தமிழ்நாட்டுக்குள் கொண்டு வருதற்கு தடை விதிக்க வேண்டும். ஆற்று கழிமுகப்பகுதிகளை முறையாக தூர்வார வேண்டும். இந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story