மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை


மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை
x

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மக்களை தேடி மருத்துவம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர், அதன் தலைவர் கண்மனி, பொதுச்செயலாளர் அருள்செல்வி ஆகியோர் தலைமையில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 2 மணி நேர பணிக்கு ரூ.4 ஆயிரத்து 500 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் நாங்கள் நாள் முழுவதும் பணியாற்றி வருகிறோம். எனவே, எங்களை நிரந்தரம் செய்து முழுநேர ஊழியர்களாக்கி, காலத்துக்கேற்ற ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை கால செலவுக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஸ்டெர்லைட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பை சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் நேற்று மாவட்ட கலெக்டரிடம் தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என ஒருநபர் விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது. இந்த அறிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறந்து, இந்த ஆலையில் பணியாற்றி வந்த குடும்பங்களுக்கும், சுற்றுவட்டார மக்களுக்கும் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் எந்த வித பாதிப்பும் இல்லை. எனவே ஆலை இயங்குவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படவில்லை என்பதை நாங்கள் நன்றாக உணர்ந்து உள்ளோம். அது மட்டுமின்றி தூத்துக்குடி வாழ் மக்களுக்கு வேலை கிடைக்க ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளனர்.


Next Story