பொன்னேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை


பொன்னேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 3 Jan 2023 12:34 AM IST (Updated: 3 Jan 2023 12:19 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உடையார்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் சங்க கூட்டமைப்பின் சார்பில் தேசிய பென்சனர் சங்க தின விழா, வட்ட தலைவர் சுந்தரேசன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து பேசினர். கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சோழகங்கம் என்ற பொன்னேரியில் நான்கு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை ஆழப்படுத்தி, கரைகளை அகலப்படுத்தி, கரைகளில் பஸ் செல்லவும், ஏரியில் படகு சவாரிக்கும், சுற்றுலாத்தலமாக மாற்றவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயங்கொண்டம் நகராட்சியில் கழிவுநீரை கால்வாய் மூலம் நீர்நிலைகளில் நிரப்புவதை நிறுத்தி, சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும். மத்திய அரசு போல் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story