கோவில்பட்டியில் வாறுகால் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிபொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் வாறுகால் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நகரசபை கவுன்சிலர் கவியரசன் தலைமையில் 32-வது வார்டு பாரதிநகர் மேட்டுத்தெருவை சேர்ந்த மக்கள் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாரதிநகர் மேட்டுத்தெரு பகுதியில் வாறுகாலுடன் கூடிய சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் வாறுகால் செல்லும் வழியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கழிப்பறை கட்டிடம் கட்டி, பணிக்கு இடையூறு செய்து வருகிறார். நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை செய்தும் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற அந்த நபர் மறுத்து வருகிறார். எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி வாறுகால் மற்றும் சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பின்னர் உதவி கலெக்டர் மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த மனு மீதுஉரிய நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டர் உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.