திருத்துறைப்பூண்டியில் இருந்து திருச்சிக்கு டெமோ பயணிகள் விரைவு ெரயில்


திருத்துறைப்பூண்டியில் இருந்து திருச்சிக்கு டெமோ பயணிகள் விரைவு ெரயில்
x

திருத்துறைப்பூண்டியில் இருந்து திருச்சிக்கு டெமோ பயணிகள் விரைவு ெரயில்

திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் இருந்து திருச்சிக்கு டெமோ பயணிகள் விரைவு ரெயிலை செல்வராஜ் எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அகல ரெயில் பாதை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அகல ரெயில்பாதை பணிகள் முடிவடைந்து, திருவாரூர்- காரைக்குடி வரை ெரயில் சேவை நடைபெற்று வருகிறது. இந்த ெரயில் திருத்துறைப்பூண்டி, நாச்சிகுளம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, கண்டனூர் புதுவயல், காரைக்குடி வரை செல்கிறது.

அதேபோல் சென்னையிலிருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை விரைவு ெரயில் இயக்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டியில் இருந்து தினமும் காலை வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி வரையும், மாலை வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கும் ெரயில் இயக்கப்படுகிறது.

ெடமோ பயணிகள் விரைவு ரெயில்

வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை ெரயில் இயக்கப்படுகிறது. ஆனால் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சை வழியாக திருச்சிக்கு புதிய விரைவு ெரயில் இயக்க வேண்டும் என நீண்ட நாட்களாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று நேற்று திருத்துறைப்பூண்டியில் இருந்து திருச்சிக்கு டெமோ பயணிகள் விரைவு ெரயில் இயக்கப்பட்டது. இதில் செல்வராஜ் எம்.பி. கலந்துகொண்டு ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர், நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன், தி.மு.க. நகர செயலாளர் ஆர்.எஸ். பாண்டியன், முன்னாள் எம். எல்.ஏ. உலகநாதன், ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ெரயில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்டு திருநெல்லிக்காவல், திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சை, திருச்சி வரை செல்கிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டிக்கு 9,30 மணிக்கு வந்து சேருகிறது.


Next Story