தக்கலை அருகே 3 வீடுகள் இடித்து அகற்றம்
தக்கலை அருகே 3 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
தக்கலை,
தக்கலை அருகே 3 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
இடித்து அகற்றம்
தக்கலை அருகே கோதநல்லூர் பேரூராட்சி பகுதியான சரல்விளை, காட்டுகுளத்தின் கரையில் உள்ள புறம்போக்கு நிலத்தில் 3 வீடுகள் உள்ளன. மூன்று தலைமுறையாக இந்த பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் வசித்து வரும் பகுதி குளத்தின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறிய பொதுப்பணித்துறையினர் அங்கிருந்து காலி செய்ய நோட்டீஸ் கொடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து அந்த வீடுகளை சேர்ந்தவர்கள் மாற்று இடம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் பொக்லைன் எந்திரம் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடுகள் அகற்றப்பட்டன. இதனால் வெட்ட வெளியில் தார்பாயில் கொட்டகை அமைத்து வீடு இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், குழந்தைகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அங்கு பரிதவித்து வருகின்றனர்.
எனவே அந்த குடும்பத்தினருக்கு மாற்று வீடுகள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.