8 கரி ஆலைகள் இடித்து அகற்றம்
8 கரி ஆலைகள் இடித்து அகற்றப்பட்டன.
தமிழகத்தில் நிலமட்டத்துக்கு அடியில் தொட்டி அமைத்து செயல்படும் தேங்காய் ஓடு கரி ஆலைகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், அதனை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி பழனி சுற்றுவட்டார பகுதிகளில் தாசில்தார் சசி தலைமையில் துணை தாசில்தார் சஞ்சய்காந்தி, திண்டுக்கல் மாசுக்கட்டுப்பாடு உதவி பொறியாளர் உதயா உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
இதில் பழனி அருகே மேல்கரைப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி பகுதிகளில் 8 தேங்காய் ஓடு கரி ஆலைகள், விதிமுறையை மீறி நிலத்துக்கு அடியில் தொட்டி அமைத்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அந்த ஆலைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் வரும் நாட்களில் விதி மீறி இதுபோன்று ஆலைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.