சமுதாய நலக்கூடம் இடிப்பு


சமுதாய நலக்கூடம் இடிப்பு
x

சமுதாய நலக்கூடம் இடிப்பு

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கலை அடுத்த ஆப்பிகோடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் அருகே கிள்ளியூர் பேரூராட்சி சார்பில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. அந்த சமுதாய நலக்கூடத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஆப்பிகோடு பகுதியைச் சேர்ந்த 10 பேரும், குஞ்சாகோடு பகுதியை ேசர்ந்த கண்டால் தெரியும் சிலரும் சேர்ந்து கிட்டாச்சி எந்திரம் மூலம் சமுதாய நலக்கூடத்தை இடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து கிள்ளியூர் பேரூராட்சி செயல் அலுவலர் பதுர் நிஷா கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் சமுதாய நலக் கூடத்தை இடித்ததாக ஆப்பிகோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன், ஜார்ஜ், விஜின், ஷாஜின் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story