ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றம்
வேலூர் பழைய பஸ்நிலையம் அருகே ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
வேலூர்
வேலூர் பழைய பஸ்நிலையம் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான காலி இடம் அருகே உள்ள சில பகுதியை ஆக்கிரமித்து கட்டிடம் எழுப்பும் பணி நடந்து வருகிறது. இதனை அறிந்த வேலூர் வருவாய்துறையினர் கடந்த மாதம் ஆக்கிரமிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கினார். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கட்டுமான பணியை செய்து வந்தார்.
இந்த நிலையில் தாசில்தார் செந்தில் தலைமையில் வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த கட்டிடத்தை இடித்து அகற்றினர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனரும் அப்புறப்படுத்தப்பட்டது. இதையொட்டி வேலூர் வடக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story