ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணி
வந்தவாசியில் ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்றது.
திருவண்ணாமலை
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி 20-வது வார்டுக்கு உள்பட்ட காமராஜர் நகர் பகுதியையொட்டி சென்னாவரம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் நீர்வரத்துக் கால்வாய் உள்ளது. அந்த பகுதியில் உள்ள 4 வீடுகளின் முன்பகுதிகள் இந்த கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி வந்தவாசி பொதுப்பணித்துறையினர் இந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடங்கினர். அப்போது வந்தவாசி தெற்கு போலீசார் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் டி.பாபு, நகராட்சி கட்டிட ஆய்வாளர் பழனிவேல், 20-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கிஷோர்குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் சுமார் 129 சதுர மீட்டர் அளவிலான ஆக்கிரமிப்புகளை டிரில்லிங் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடந்தது.
Related Tags :
Next Story