கரூர் காமராஜ் மார்க்கெட்டை இடிக்கும் பணி தொடங்கியது
புதிய வணிக வளாகம் அமைப்பதற்காக கரூர் காமராஜ் மார்க்கெட்டை இடிக்கும் பணி தொடங்கியது உள்ளது.
காமராஜ் மார்க்கெட்
கரூர் காமராஜ் மார்க்கெட் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனது. இதனால் கடைகளில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும், சேதமடைந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் குண்டும் குழியுமாகவும், சுகாதாரமற்ற முறையிலும் காணப்பட்டன. இதனையடுத்து மார்க்கெட்டிற்கு புதிய வணிக வளாகம் கட்ட வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர் மார்க்கெட்டிற்கு புதிதாக வணிக வளாகம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.6 கோடியே 7 லட்சம் நிதி ஒதுக்கீடு உத்தரவிட்டது. அதன்பிறகு வணிகவளாகம் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடந்தது.
இடிக்கும் பணி தீவிரம்
இதையடுத்து கரூர் மார்க்கெட்டில் இயங்கி வந்த அனைத்தும் கடைகளும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு அங்கு தற்போது வியாபாரம் நடந்து வருகிறது. இதனால் ஏற்கனவே கரூர் மார்க்கெட் இயங்கி வந்த வணிகவளாகத்தில் உள்ள பழைய கடைகளை இடிக்கும் பணி தொடங்கப்பட்டு மும்முரமாக நடந்து வருகிறது.இதுகுறித்து கரூர் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தற்போது பழைய மார்க்கெட்டில் உள்ள கடைகளின் மேற்கூரை ஓடுகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. பிறகு பழைய கடைகளின் கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் தொடங்கப்படும். மேலும் புதிய வணிக வளாகம் சுமார் 174 கடைகளுடன் கட்டப்படும் என தெரிவித்தனர்.