ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

அனைத்து கட்சி மக்கள் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் தேசபந்து திடலில் அனைத்து கட்சி மக்கள் போராட்டக்குழு சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் முத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் பெயரில் உள்ள விருதுநகர் புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெயிலுமுத்து, மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் காளிதாஸ், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மணிமாறன், விடுதலைசிறுத்தைகள்கட்சி நகர செயலாளர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story