பள்ளிபாளையம் அருகே 7-வது நாளாகவிவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்
நாமக்கல்
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் அருகே பிலிக்கல் மேடு பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதையொட்டி நேற்று 7-வது நாளாக ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லமுத்து தலைமை தாங்கினார். போராட்டத்தில் தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்திட வேண்டும், உழவர்களின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும், விவசாயத்திற்கு தேவையான மின்சாரத்தை தங்கு தடை இன்றி வழங்க வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story