ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட ஆதித்தமிழர் கட்சியின் சார்பில் ஆவியூர் கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு நிவாரணம் கிடைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்புராஜ், மேற்கு மாவட்ட தலைவர் ராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சியின் பொதுச்செயலாளர் விஸ்வை குமார் நிறைவுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story