மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துதேன்கனிக்கோட்டையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துதேன்கனிக்கோட்டையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ்தலைவர் அப்துர் ரகுமான் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் மஞ்சு வரவேற்று பேசினார். மாநில செயலாளர் தேன்கு அன்வர், பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர தலைவர் பால்ராஜ், முன்னாள் தலைவர் தாஸ், இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர் ஆதாம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் தளி தொகுதி பொறுப்பாளர் சுஹேலூதீன், லாசர், சண்முகம், துரை, அஜ்மல், முகமது நூருல்லா, அக்மல், முகமது சுபேர், சுயேபுதீன், முத்து, கதிர், முகமது இத்ரீஸ், முகமது மஸர், சாந்த் பாஷா, மொஹம்மத், அணில் குமார், முகம்மது, செந்தூரபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அசேன்ராஜா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story