ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி விருதுநகர் மாவட்ட கிளையின் சார்பில் மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையிலும், பல்வேறு கட்சி நிர்வாகிகள் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் மீது தொடரும் தீண்டாமை வன்கொடுமையை கண்டித்தும், தீண்டாமை கொடுமையில் ஈடுபடுவோர்மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் செல்லக்கண்ணு மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story