ஆர்ப்பாட்டம்
இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் எதிரே மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், மணிப்பூர் மாநில அரசு பதவி விலக வலியுறுத்தியும் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் மணி தலைமை தாங்கினார். மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் மாநில அரசை பதவி விலக வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, மாவட்ட பிரதிநிதி சிவசங்கரன், நகர்மன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் லட்சுமணன், ம.தி.மு.க. நகர செயலாளர் தாமோதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் காத்தமுத்து, மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.