ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் ராஜகோபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மகளிர் உரிமைத்தொகை திட்டமானது வருவாய்த்துறை சார்புடைய நிலையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களை அந்த பணியை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதால் ஊரக வளர்ச்சி துறை பணிகள் பாதிக்கும் நிலையில் வருவாய் துறை அலுவலர்களை இத்திட்ட பணி மேலாண்மை அலுவலர்களாக நியமித்துள்ள நிலையில் இதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் அதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில் அந்த நடைமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோன்று மாவட்டத்தில் உள்ள 11 பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள் முன்பும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story