ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

அணுகு சாலை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர்


விருதுநகர் புறவழிச்சாலையில் வடமலைகுறிச்சி விலக்கு அருகே அணுகு சாலை அமைக்க வேண்டும் என கோரி கடந்த மார்ச் மாதம் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ரூ. 17 கோடி மதிப்பீட்டில் உடனடியாக அணுகு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பாலத்தில் சீரமைப்பு பணியை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊழியர்கள் வந்த நிலையில் அப்பகுதி மக்கள் பாவாலி பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் அந்தோணியம்மாள் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைதொடர்ந்து நேற்று வடமலைகுறிச்சி விலக்கில் அணுகு சாலை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story