கிருஷ்ணகிரியில்பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில்பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Aug 2023 1:00 AM IST (Updated: 13 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி நடந்த பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி அறிக்கை வெளியிட கோரி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அர்ச்சுணன் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் கோவிந்தராஜ், சங்கர், கரவியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சிவப்பிகாசம் பேசுகையில், கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்தில் பல்வேறு விதிமுறை மீறல்கள் உள்ளன. அவற்றை முறையாக போலீசார் விசாரித்து அறிக்கை வெளியிட்டால் தான் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரியும் என்றார்.

இதில் மாவட்ட பொதுச் செயலாளர் அர்ச்சுனன், தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினர் முகவரி பேகம், மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோட்டீஸ்வரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தினேஷ்குமார், நிர்வாகிகள் மயில்வேலன், முருகன், ரமேஷ், கேசவன், சிங்காரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story