ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விருதுநகர்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு பெரிய வாடியூர் கிராமத்தில் அர்ஜுனா நதிக்கு பொதுமக்கள் செல்வதற்கான பாதையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊர் தலைவர்கள் செல்லக்கனி, வேண்டிய பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னு பாண்டியன், மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். இதனைதொடர்ந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.


Next Story