காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்புவிவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்புவிவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2023 1:00 AM IST (Updated: 23 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து வட்ட தலைவர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தை குறைப்பதையும், சிதைப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும். வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்கு விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பெரியசாமி, வட்ட பொருளாளர் ரங்கநாதன், வட்டக் குழு உறுப்பினர்கள் ஜெய்சங்கர், சண்முகம், ராஜா, மாது மற்றும் பச்சையப்பன், முருகன், ராஜேந்திரன், சரவணன் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story