ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட தாசில்தார் மனோஜ் முனியன் என்பவரை விசாரணை ஏதும் இன்றி பணியிடை நீக்கம் செய்த அந்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி தாசில்தாரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணை தாசில்தார் கோதண்டராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர்கள் லியாக்கத் அலி, சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
Related Tags :
Next Story