ஆர்ப்பாட்டம்
நில தரகர்கள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள பஞ்சு மார்க்கெட் நேரு சிலை எதிரே, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நில தரகர்கள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாநில தலைமை செயலாளர் சுரேஷ்குமார், துணை செயலாளர் அய்யப்பன், நகர செயலாளர் ராசு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முத்திரை தாள் கட்டண உயர்வு, பதிவு கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.