கிருஷ்ணகிரியில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது


கிருஷ்ணகிரியில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 15 Sept 2023 1:00 AM IST (Updated: 15 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு சார்பில் நேற்று மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளரும், தளி சட்டமன்ற உறுப்பினருமான டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகுமய்யா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில குழு உறுப்பினர்கள் பழனி, மாதையன், சின்னசாமி, கண்ணு, சுந்தரவள்ளி, விவசாய சங்க மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, சக்கரவர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story