ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

திருப்பனந்தாள் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நீலப்புலிகளின் இயக்க மாநில தலைவர் புரட்சிமணி தலைமை தாங்கினார். தமிழ்தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, பகுஜன் சமாஜ் கட்சி துணைத்தலைவர் ராஜவேலு, விடுதலை சிறுத்தை கட்சி மண்டல செயலாளர் சதா.சிவகுமார், தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மக்கள் மறுமலர்ச்சி கழகம் தலைவர் பொன்.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திருவிடைமருதூர் தாசில்தார் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையை மீறி கோசாலையை அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மனையற்ற குடிமக்கள் அனைவருக்கும் பட்டாவுடன் வீட்டுமனை வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story