ஆர்ப்பாட்டம்
நிலத்தரகர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நில வழிகாட்டி மதிப்பு உயர்வை குறைக்க வேண்டும். முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்புராம், மாநிலத் துணைச்செயலாளர் மனிதத்தேனீ' சுந்தரமூர்த்தி, சங்க நிர்வாகிகள், நிலத்தரகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story