த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்


த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
x

பா.ஜ.க.வினரை கண்டித்து த.மு.மு.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்லாமியர்கள் மற்றும் நபிகள் நாயகத்தை பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் நுபுல்சர்மா மற்றும் நவீன்ஜின்டால் ஆகியோரை கண்டித்தும், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் இருவரையும் கைது செய்யக்கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன் தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் அப்துல்ஹக்கீம் கண்டன உரையாற்றினார்.

இதில் மாவட்ட பொருளாளர் அப்பாஸ், நிர்வாகிகள் உஸ்மான், ஷாஜகான், ஜாமியாலம் ராவுத்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர தலைவர் அலிஅக்பர் நன்றி கூறினார்.


Next Story